பிரம்மதண்டு காம்பு இல்லாமல் பல மாடல்கள் ஆன உடைந்த கூறிய முட்கள் உள்ள இலைகளையும், பளிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையும், கடுகு போன்ற விதைகளையும் உடைய நேராக வளரும் சிறு செடி. பால் மஞ்சள் நிறமாக இருக்கும். இலைகளின் மீது வெண்ணிற பூச்சு காணப்படும். தரிசு நிலங்களில் தானாக வளரக்கூடியது. இலை, பால், வேர், விதை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. நோய் உடல் தேற்றவும், போக்கவும் பயன்படும். இலைச் சாறை பத்து மில்லியளவு எடுத்து ஒரு மாதம் கொடுத்து வர சொறி, சிரங்கு, மேக ரணங்கள், குட்டம் ஆகியவை தீரும். இலைச்சாறு தடவை தேள்கொட்டிய கடுப்பு நீங்கும். சமூல சாறு 30 மில்லி கொடுத்து கடிவாயில் அரைத்துக் கட்ட பாம்பு விஷம் தீரும். பேதியாகும், இலையை அரைத்து கட்டி வர கரப்பான், பேய்ச் சொறி, சிரங்கு, உள்ளங்கால், கை, பாதங்களில் வரும் புண்கள் ஆறும். 20 பூக்களை நீரில் ஊற வைத்து குளித்து வர ஒரு மண்டலத்தில் கண் நோய்கள் விலகும். பால் ஒரு துளி கண்ணில் விட்டு வர கண் வலி, சதை வளர்தல், கண் சிவத்தல், அரிப்பு, கண் கூச்சம், நீர் வடிதல், கண் எரிச்சல் ஆகியவை தீரும்.
பிரம்மதண்டு காம்பு

Spread the love