July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரான்சிலிருந்து மேலும் 3 ரஃபேல் இந்தியா வந்தடைந்தது

புது தில்லி, ஜூலை 22

ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ஏழாம் கட்டமாக மேலும் மூன்று புதிய ரபேல் போர் விமானங்கள் இந்தியா வந்தடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரான்சில் இருந்து ரூ.58 ஆயிரம் கோடி மதிப்பிலான 36 புதிய ரபேல் போர் விமானங்களை வாங்க மத்திய அரசு கடந்த 2016ல் ஒப்பந்தம் போட்டது. முதல்கட்டமாக ஐந்து ரபேல் போர் விமானங்கள் கடந்த ஆண்டு ஜூலை 29ல் ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திற்கு வந்து சேர்ந்தன. அதன் பின் பல்வேறு கட்டங்களாக ரஃபேல் போர் விமானங்கள் நம் நாட்டுக்கு வந்து சேர்ந்தன. இந்நிலையில் ஏழாம் கட்டமாக மூன்று புதிய ரஃபேல் விமானங்கள் பிரான்சில் இருந்து தொடர்ச்சியாக 8000 கி.மீ. தூரம் பயணித்து புதன்கிழமை நம் நாட்டில் தரை இறங்கின. இதன் வாயிலாக நம் விமானப்படையில் 24 ரபேல் போர் விமானங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக வந்து சேர்ந்த மூன்று விமானங்கள் மேற்கு வங்கத்தின் ஹசிமரா விமான படை தளத்தில் உள்ள இரண்டாவது படைப்பிரிவில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Spread the love