January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரிக்ஸ் முதல் வேலைவாய்ப்பு செயற்குழு கூட்டத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து ஆலோசனை

Image processed by CodeCarvings Piczard ### FREE Community Edition ### on 2017-08-30 13:09:54Z | http://piczard.com | http://codecarvings.com

புது தில்லி, மே 14

பிரிக்ஸ் நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு செயற் குழு கூட்டத்தில், தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பு குறித்து உறுப்பு நாடுகள் ஆலோசித்தன. பிரிக்ஸ் அமைப்புக்கு இந்தாண்டு, இந்தியா தலைமை தாங்குகிறது. இதனால் பிரிக்ஸ் நாடுகளின் முதல் வேலைவாய்ப்பு குழு கூட்டம், தில்லி சுஷ்மா சுவராஜ் பவனில் கடந்த 11 மற்றும் 12 ஆம் தேதிகளில் காணொலி காட்சி மூலம் நடைப்பெற்றது. இதற்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை செயலாளர் அபூர்வ சந்திரா தலைமை தாங்கினார்.

பிரிக்ஸ் நாடுகள் இடையே சமூக பாதுகாப்பு ஒப்பந்தங்களை மேம்படுத்துவது, தொழிலாளர் சந்தைகளை முறைப்படுத்துவது, பெண் தொழிலாளர்கள், சாலையோர தொழிலாளர்களின் பங்களிப்பு, தொழிலாளர் சந்தையின் பங்கு குறித்து இதில் விவாதிக்கப்பட்டது. உறுப்பு நாடுகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா தவிர, சர்வதேச தொழிலாளர் அமைப்பு பிரதிநிதிகள், சர்வதேச சமூக பாதுகாப்பு முகமை பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு முக்கிய ஆலோசனைகளையும், கருத்துக்களையும் தெரிவித்தனர்.

சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் தொடர்பாக உறுப்பு நாடுகள் ஒருவருக்கு ஒருவர் பேச்சுவார்த்தை, விவாதங்கள் நடத்தி, அதன்பின் ஒப்பந்தத்தில் கையயழுத்திட தீர்மானித்தன. இந்த சமூக பாதுகாப்பு ஒப்பந்தம், சர்வதேச தொழிலாளர்கள் தங்களுக்கான பயன்களை சொந்த நாட்டுக்கு கொண்டு செல்ல முடியும். இதன் மூலம் அவர்களுக்கு ஏற்படும் பண இழப்பு தவிர்க்கப்படும். தொழிலாளர் சந்தையை முறைப்படுத்தும் வி­யத்தில் எடுக்கப்பட்ட பல நடவடிக்கைகள் குறித்தும், முறைசாரா அபாயத்தை, கொவிட்-19 எவ்வாறு அதிகரித்துள்ளது என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும், தொழிலாளர்கள் சந்திக்கும் சவால்கள், அவர்களுக்காக உறுப்பு நாடுகள் எடுத்த நடவடிக்கைகள், அவர்களின் சமூக பாதுகாப்பு முறை குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Spread the love