May 10, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரிட்டனில் கோவிஷீல்டு உற்பத்தி தொடங்க அதார் பூனாவாலா திட்டம்

புது தில்லி, மே 3

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் கோவிஷீல்டு கோவிட் தொற்று தடுப்பூசி உற்பத்தி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது என சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி அதார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அவருக்கு மத்திய அரசு ஒய் பிரிவு கமாண்டே பாதுகாப்பு அளித்துள்ளது. அவர் இப்போது லண்டனில் குடும்பத்தினருடன் தங்கியுள்ளார்.

கோவிட் தடுப்பூசி தயாரிப்பு விவகாரத்தில் அனைத்து பாரங்களும் சுமத்தப்படுவதாகவும், தடுப்பூசியை வழங்கக் கோரி இந்தியாவில் ஆக்ரோசமாக சிலர் தொலைபேசியில் பேசி வருவதாகவும் அண்மையில், அதார் பூனாவாலா தெரிவித்திருந்தார்.

மேலும், பிரிட்டனில் கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளதாவது: பிரிட்டனில் உள்ள சீரம் நிறுவனத்தின் பங்குதாரர்களுடன் நல்லபடியாக ஆலோசனை நடைபெற்றது. புணேயில் கோவிUல்டு தடுப்பூசி உற்பத்தி முழு வீச்சில் நடைபெறுகிறது. விரைவில் இந்தியா திரும்பி இது குறித்து ஆய்வு நடத்துவேன் என தெரிவித்துள்ளார்.

Spread the love