January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிரைம் டே சேல் சிறப்பு விற்பனை தற்காலிகமாக நிறுத்துவதாக அமேசான் அறிவிப்பு

புது தில்லி, மே 10

நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக சிறப்பு விற்பனையை அமேசான் நிறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவான செய்தியாவது:

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான், தனது பிரைம் டே சேல் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

நாட்டில் கோவிட் தொற்று பாதிப்பின் 2வது அலை மிக தீவிரமாக இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக அமேசான் தெரிவித்துள்ளது. கோவிட் தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு இருக்கிறது. தொற்று அதிக தீவிரமாக பரவி வருவதை தொடர்ந்து அமேசான், கூகுள் என பல்வேறு நிறுவனங்கள் இந்தியாவுக்கு தேவையான உதவிகளை வழங்க முன்வந்துள்ளன. மருத்துவ உபகரணங்கள் வழங்குவதில் துவங்கி, அவற்றை இலவசமாக இந்தியா கொண்டு வருவது என பலவிதங்களில் உதவிகளை செய்து வருகின்றன.

வழக்கமாக அமேசான் நிறுவனம் ஜூலை மாத வாக்கில் தனது வியாபாரத்தை அதிகப்படுத்தும் நோக்கில் பிரைம் டே சேல் எனும் சிறப்பு விற்பனையை நடத்தி வருகிறது. இந்த விற்பனையில் பல்வேறு பொருட்களுக்கும் அசத்தல் சலுகை, தள்ளுபடி, வங்கி சார்ந்த கேஷ்பேக் உள்ளிட்டவை வழங்கப்படும்.

Spread the love