September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 2000 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம் செய்து சாதனை படைத்த மாணவர்களுக்கு ஆட்சியர் பாராட்டு

விருதுநகர், செப்.14

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகாசி வட்டம் கல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த அருண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மாணவர்கள் “பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி முதல் மும்பை வரை 2000 கி.மீ விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இன்டர்நே­னல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றதையயாட்டி மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

சிவகாசி வட்டம் கல்லமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலசுப்பிரணியம் கலைசெல்வி தம்பதியின் மகன்களான அருண் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் “பிளாஸ்டிக் மறுசுழற்சி பயன்பாடு குறித்து 11 நாட்களில் கன்னியாகுமரி முதல் மும்பை வரை 2000 கிலோ மீட்டர்கள் விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டு இன்டர்நேசனல் புக் ஆப் ரெக்கார்டில் இடம் பெற்றுள்ளனர். மேலும் பசுமை இந்தியா என்ற அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் 5000 மரக்கன்றுகள் இதுவரை இவர்கள் ஏற்பாட்டில் ஊன்றியுள்ளனர். இதற்காக மாணவர்கள் இருவரும் இன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து வாழ்த்து பெற்றனர். மேலும் இது போன்று சாதனைகள் மற்றும் சமூக சேவைகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என மாணவர்களை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி ஊக்கப்படுத்தினார்.

Spread the love