September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பீன்ஸ் ஒரு கிலோ ரூ.50க்கு விற்பனை

சேலம், செப்.14

சேலம் மாவட்டம், கருமந்துறை, வெள்ளிமலை உள்ளிட்ட மலைக்கிராமங்களில், பீன்ஸ் அதிகளவில் பயிர் செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் காய்கள் விற்பனைக்காக, தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட் கொண்டு வரப்படுகிறது.

திங்கள்கிழமை அன்று காய்கறி மார்க்கெட்டிற்கு உள்ளூரில் இருந்து, 500 கிலோ, பெங்களூரு உள்ளிட்ட பகுதியிலிருந்து இரண்டு டன் என, இரண்டரை டன் பீன்ஸ் வரத்து இருந்தது. ஒரு கிலோ, ரூ.50க்கு விற்பனையானது. கடந்த வாரம் உள்ளூரில் இருந்து இரண்டு டன், வெளியூரில் இருந்து இரண்டு டன் வரத்து இருந்த நிலையில் ஒரு கிலோ, அதிகபட்சமாக ரூ.35 வரை விற்பனையானது. தற்போது வரத்து சரிந்துள்ள நிலையில், விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Spread the love