திண்டுக்கல், மார்ச் 14
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோமனாம்பட்டி என்ற கிராமத்தில் சூரன் என்ற விவசாயி பீர்க்கங்காய் சாகுபடி செய்கிறார். இதில் பழ ஈ தாக்குதல் இருப்பதால் மகசூல் மற்றும் காயின் தரம் குறைகிறது. இதனை கட்டுபடுத்த மதுரை வேளாண்மை கல்லூரி மாணவன் வீ.மணிகண்டன், விவசாயியின் வயலில் மதீல் யூஜெனால் பொறியை வைத்து அதன் செயல் விளக்கத்தை விவசாயிக்கு எடுத்துரைத்தார். மதீல் யூஜெனால் என்பது தாவரங்களில் இயற்கையாக உற்பத்தியாகும் ஒரு வேதியியல் பொருளாகும். இந்த மதீல் யூஜெனாலை ஆண் ஈ, பெண் ஈக்களை ஈர்க்கும் பெரோமோங்களை உற்பத்தி செய்ய பயன்படுத்துகிறது.
இந்த மதீல் யூஜெனாலை செயற்கையாக உருவாக்கி அதனை மாலத்தியன் அல்லது வேறு ஏதேனும் ஒரு பூச்சிகொல்லி உடன் 1:1 விகிதத்தில் கலந்து ஒரு பொறிக்கு 10 மி.லி என ஒரு எக்டருக்கு 25 பொறி வைக்க வேண்டும்.