January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புகையான் வயலில் அதிகாரிகள் மற்றும் வேளாண் விஞ்ஞானிகள் ஆய்வு

கடலூர், டிச.23

கடலூர் மாவட்டம், கீரப்பாளையம் வட்டாரத்தில் நேரடி நெல் விதைப்பு பகுதிகளான சேங்கல்மேடு, எசனை, கொடியாளம், முகையூர், துணிசிரமேடு, கண்ணங்குடி ஆகிய பகுதிகளில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது. நீர் மட்டத்திற்கு மேலிருக்கும் பயிரின் அடிப்பகுதியில் இளம்பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் ஓட்டி கொண்டிருக்கும். தாக்கப்பட்ட பயிர்கள் முற்றிலும் காய்ந்து தீய்ந்த மாதிரி காட்சியளிக்கும் முதிர்ச்சியடைந்த பயிர்கள் காய்ந்து வட்டமான திட்டுகளாக காணப்படும். மேலும் பயிர்கள் சாய்ந்து விடும் இவ்வாறான அறிகுறிகள் புகையான் தாக்குதலால் ஏற்படுகிறது.

இதனை கட்டுபடுத்த அதிகமான தழைச்சத்து உரங்களை தவிர்த்தல் நல்லது. வயலில் நன்றாக தண்ணீர் வடிந்த பிறகு இமிடாகுளோபிரிட் 100 மி.லி, எக்டர் அல்லது பிப்ரோனில் 1000 கி,எக்டர் வீதம் தெளிக்க வேண்டும். புகையான் பாதித்த வயல்களை வேளாண் அறிவியல் நிலைய விஞ்ஞானி மருதாசலம் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு பரிந்துரை வழங்கினார். வயலாய்வில் வேளாண்மை உதவி இயக்குநர் அ.சித்ரா, உதவி வேளாண்மை அலுவலர், புகழேந்தி, பயிர் அறுவடை பரிசோதகர் கார்த்திகேயன், ஊராட்சி மன்ற தலைவர் கண்ணகி, ராமகிருஷ்ணன் விவசாயிகள் மகேந்திரன், கருணாநிதி ஆகியோர் உடன் இருந்தனர். ஏற்பாடுகளை புகழேந்தி, உதவி வேளாண்மை அலுவலர் செய்திருந்தார்.

Spread the love