July 7, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் சந்தையில் அறிமுகம்

புது தில்லி, ஏப்.23

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ கார் உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்த காரின் சிறப்பம்சங்களாவது:

புதிய ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் யஹட்லைட்டுகளுக்கு இடையில் எல்இடி விளக்கு பட்டை சேர்க்கப்பட்டுள்ளது. புதிய பம்பர் அமைப்பு மற்றும் பின்புற கதவு டிசைனில் மாற்றம் தெரிகிறது.
மேட்ரிக்ஸ் எல்இடி யஹட்லைட்டுகளும் இதன் முக்கிய அம்சமாக இருக்கிறது. பம்பரில் செய்யப்பட்டுள்ள மாற்றம் காரணமாக, ஃபேஸ்லிஃப்ட் மாடல் சற்றே கூடுதல் நீளத்தை பெற்றிருக்கிறது.

6.5 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.
9.2 அங்குல தொடுதிரை கொண்ட இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்சனலாக பெற முடியும்.

இந்த காரில் 8 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், புதிய ஸ்டீயரிங் வீல், கோல்ஃப் காரில் வழங்கப்படும் க்ளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே இதிலும் கொண்டு வரப்பட்டுள்ளது.

1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் 80 எச்பி முதல் 110 எச்பி வரையிலான பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

தற்போது இந்தியாவில் ஐந்தாவது தலைமுறை ஃபோக்ஸ்வேகன் போலோ கார் விற்பனையில் உள்ளது. இந்த கார் அவ்வப்போது சில கூடுதல் அம்சங்களுடன் தொடர்ந்து விற்பனையில் வைக்கப்பட்டுள்ளது. எனினும், வெளிநாடுகளில் ஆறாவது தலைமுறை மாடல் விற்பனையில் உள்ளது. தற்போது இந்த மாடல்தான் மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

போலோ ஆறாம் தலைமுறை ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்தியாவுக்கு வருவது சந்தேகமாக உள்ளது. தற்போது எஸ்யூவி கார்களை களமிறக்குவதில் ஃபோக்ஸ்வேகன் கவனம் செலுத்தி வருவதால், ஏழாம் தலைமுறை போலோ கார்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love