புதிய ஃபோல்டபிள் ஸ்மார்ட்போனை எம்ஐ நிறுவனம் சீனாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. விரைவில் சர்வதேச சந்தையில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிப்ஸ்டர் தகவலின்படி, சர்வதேச ஐஎம்இஐ தளத்தில் M2011J18G என்ற எண்ணுடன் இந்த மொபைல் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்திய ஐஎம்இஐ தளத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
இதர நிறுவனங்களின் மடிப்பு மொபைல்களைக் காட்டிலும் இந்த சாதனத்தை எளிதாக பயன்படுத்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும் ஸ்மார்ட்போன் வேரியண்ட் லேசர் கோல்ட் மிட் பிரேம் வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
சீனாவில் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,12,000 ஆகவும், 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.1,23,000 ஆகவும், டாப் எண்ட் மாடலான 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி மெமரி வேரியண்ட் விலை இந்திய மதிப்பில் ரூ,1,45,000 ஆகவும் இருக்கிறது.
6.52 இன்ச் உயரம், 840×2520 பிக்சல் துல்லியம் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் மாடல், அமோஎல்இடி எச்டிஆர் 10+ தெளிவு கொண்ட டிஸ்பிளே உள்ளது. இது டால்பி விஷன், இன்டிஸ்ப்ளே க்யூஎச்டி ப்ளஸ் தெளிவையும் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.
பின்புறம் 108 எம்பி முதன்மை கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் சென்சார், 8 எம்பி டெலிஃபோட்டோ சென்சார் உடன் கூடிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் 20 எம்பி செல்ஃபீ கேமராவைக் கொண்டுள்ளது.
இரண்டு 2460 எம்ஏஎச் பேட்டரி தரப்பட்டுள்ளது. இது 67 வாட் வயர் சார்ஜிங் வசதியை ஏற்கும்.கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 37 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும்.