October 23, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய அசூஸ் ஜென்ஃபோன் 8 சீரிஸ் மே 12ம் தேதி அறிமுகமாகிறது

அசூஸ் நிறுவனத்தின் புதிய ஜென்ஃபோன் 8 சீரிஸ் மொபைல்கள் மே 12ம் தேதி வெளியிடப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

புதிய சீரிஸில் ஜென்ஃபோன் 8, ஜென்ஃபோன் 8 ப்ரோ மற்றும் ஜென்ஃபோன் 8 மினி ஆகிய மூன்று மாடல்கள் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த மொபைல் டிஸ்பிளேவில் உள்ள மேல் இடது மூலையில் ஒரு பஞ்ச்-ஹோல் கேமரா கட் அவுட் டிசைன் இருப்பதை 8 சீரிஸின் டீசர் வீடியோவில் பார்க்கமுடிகிறது

புதிய ஜென்ஃபோன் 8 சீரிஸ் மொபல்களில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புதிய ஸ்மார்ட்போன் 16 ஜிபி ரேம் திறனைப் பெற்றிருக்கும்.

ஜென்ஃபோன் 8 சீரிஸில் மிகச்சிறிய தொலைபேசியாக, ஜென்ஃபோன் 8 மினி 5.9 இன்ச் நீளத்துடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தைக் கொண்ட டிஸ்பிளே உடன் வெளிவரும். இந்த சாதனம் 64MP சோனி IMX686 சென்சார் மற்றும் சோனி IMX663 சென்சார்களையும் கொண்டிருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

அதேபோல், அசூஸ் ஜென்ஃபோன் 8 வரிசையில் உள்ள மற்றொரு மாடல் 1,124 சிங்கள் கோர் மற்றும் 3,669 மல்டி கோர் மதிப்பீடுகளைப் பெற்றுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love