June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் தீபாவளி பண்டிகையில் அறிமுகம்?

மும்பை, ஏப்.27

புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ப்ரீமியம் ஸ்கூட்டர் வருகிற தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக பியோஜியோ தெரிவித்துள்ளது.

இது குறித்து பியாஜியோ இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் டைகோ கிராஃபி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அப்டேட் செய்யப்பட்ட எஸ்ஆர்160 ஸ்கூட்டருடன் அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர்125 மற்றும் வெஸ்பா கொண்டாட்ட எடிசனும் இந்திய சந்தைக்கு கொண்டுவர தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அப்டேட்டாக புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரின் முன்பகுதி, ரீஸ்டைல் யஹட்லேம்ப்கள் உடன் புதிய தோற்றத்தை பெற்றுள்ளது. இண்டிகேட்டர்கள் ஸ்கூட்டரின் ஹேண்டில்பாரில் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தகைய முன்பக்கத்துடன் ப்ளூடூத் இணைப்பு வசதியை கொண்ட முற்றிலும்-புதிய இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இந்த அப்ரில்லா ஸ்கூட்டர் ஏற்றுள்ளது. அதேபோல் புதிய கிராஃபிக்ஸ், நிற தேர்வுகள் மற்றும் புதிய ஸ்விட்ச்கியரும் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளன. எஸ்ஆர்160 ஸ்கூட்டரில் ஏர்-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர், ஃப்யுல்-இன்ஜெக்டட் 160சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 7600 ஆர்பிஎம்-இல் 10.8 பிஎச்பி மற்றும் 6000 ஆர்பிஎம்-ல் 11.6 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது.

நேர்த்தியான வடிவமைப்பினால் புதிய அப்ரில்லா எஸ்ஆர்160 ஸ்கூட்டர் நிச்சயம் இளம் தலைமுறையினரை கவரும். இதன் விலை சற்று அதிகரிக்கப்பட வாய்ப்பிருந்தாலும் இது இந்த அப்ரில்லா ஸ்கூட்டரின் விற்பனையை பெரிய அளவில் பாதிக்காது என்றே நினைக்கிறோம் என்றார்.

Spread the love