January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய இசுஸு வி க்ராஸ் விற்பனைக்கு வந்தது

புது தில்லி, மே 10

பிஎஸ்-6 எஞ்சின் தேர்வில் இசுஸு டி மேக்ஸ் வி க்ராஸ் பிக்கப் டிரக் மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது: புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக் இந்தியாவின் ஆஃப்ரோடு வாகன சந்தையில் மிக முக்கிய மாடலாகவும், தனித்துவமான தேர்வாகவும் இருந்து வருகிறது. இந்த நிலையில், பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப புதிய எஞ்சின் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

புதிய இசுஸு டி மேக்ஸ் பிக்கப் டிரக் வாகனமானது டி மேக்ஸ் ஹைலேண்டர் என்ற விலை குறைவான மாடலிலும், அதிக பிரிமீயம் அம்சங்கள் கொண்ட டி மேக்ஸ் வி க்ராஸ் என இரண்டு மாடல்களில் கிடைக்கும்.

டி மேக்ஸ் வி க்ராஸ் மாடலானது தனிநபர் பயன்பாட்டு அம்சங்களை நிரம்ப பெற்றுள்ளது. இந்த மாடலானது இசட் மற்றும் இசட் பிரஸ்டீஜ் என இரண்டு வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு கிடைக்கும். இதில், இசட் வேரியண்ட் 2 வீல் டிரைவ் சிஸ்டத்திலும், இசட் பிரஸ்டீஜ் வேரியண்ட்டில் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாகவும் இருக்கும்.

புதிய இசுஸு வி க்ராஸ் பிக்கப் டிரக்கில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள், 18 அங்குல அலாய் வீல்கள், கீ லெஸ் என்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், 7 அங்குல தொடுதிரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

புதிய இசுஸு டி மேக்ஸ் ஹை லேண்டர் வாகனத்திற்கு ரூ.16.98 லட்சம் தமிழ்நாடு எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி மேக்ஸ் வி க்ராஸ் இசட் 2 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வேரியண்ட்டிற்கு ரூ.19.98 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டி மேக்ஸ் வி க்ராஸ் இசட் 4 வீல் டிரைவ் மேனுவல் வேரியண்ட்டிற்கு ரூ.20.98 லட்சமும், 4 வீல் டிரைவ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டிற்கு ரூ.24.49 லட்சமும் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Spread the love