புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இன்ஃபினிக்ஸ் ஹாட் 10 பிளே ஸ்மார்ட்போன் வரும் ஏப்.26ம் தேதி ஃபிளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு வரும் எனத் தெரியவந்துள்ளது.
சீனாவைச் சேர்ந்த டிரான்சியன் குழுமம் இந்த ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.8,499 மட்டுமே.
இந்த புதிய சாதனம் 6.82′ இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது.
4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்ட ஒற்றை வேரியண்டில் வருகிறது. இது மொராண்டி கிரீன், 7 டிகிரி பர்பில், ஏஜியன் ப்ளூ மற்றும் அப்சிடியன் பிளாக் ஆகிய நான்கு நிறங்களில் கிடைக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் 6.82 இன்ச் கொண்ட எச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 720×1640 பிக்சல்கள் காட்சி தெளிவு கொண்டுள்ளது. இது மீடியா டெக் ஹீலியோ ஜி 35 ஆக்டா கோர் சிப்செட் புராஸசருடன் அண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும். 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி மெமரி கொண்டிருக்கும். அத்துடன் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஒன்றும் இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போன் பின்புறம் 13 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் குவாட்-ரியர் ஃபிளாஷ் உடன் AI லென்ஸ் கொண்ட இரட்டை கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்புறத்தில், 8 எம்பி சென்சார் பஞ்ச் ஹோல் நாட்ச் உடன் முன்பக்க ஃபிளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
யூஎஸ்பி 10W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்ட 6000 எம்ஏஎச் பேட்டரியைப் பெற்றுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் அம்சத்துடன் ஃபேஸ் அன்லாக் அம்சமும் தரப்பட்டுள்ளது.