என்கோ ஏர் என்ற பெயரில் புதிய டிடபிள்யூஎஸ் இயர்பட்ஸ் சாதனத்தை ஒப்போ நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது.
மே 6ம் தேதி இந்த ஹெட்செட் சாதனம் அறிமுகமாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
24 மணிநேர பேட்டரி பேக்கப் திறன் மற்றும் ப்ளூடூத் வி5.2 கனெக்டிவிட்டி வசதியுடன் இந்த சாதனம் அறிமுகமாகும்.
இந்த சாதனத்தில் 440 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
ஒப்போ என்கோ ஏர் ட்ரூ வயர்லெஸ் ஸ்டீரியோ இயர்பட்ஸ் இத்தாலியில் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் விற்பனைக்கு வரவில்லை. அங்கிருந்து வரும் தகவல்களின்படி இந்த சாதனத்தின் விலை ரூ.9000 என்ற அளவில் இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இது கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களில் வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
நாய்ஸ் கேன்சலேசன் மற்றும் இரட்டை மைக்ரோஃபோன் அம்சங்களைக் கொண்டிருக்கும். அத்துடன் டச் கண்ட்ரோல், கண்ட்ரோல் டிராக்ஸ், வால்யூம், இன்கமிங் கால், வாய்ஸ் அசிஸ்டெண்ட் அம்சங்களையும் கொண்டிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இருக்கும் எனவும், 10 நிமிட சார்ஜிங்கில் 8 மணி நேர பேட்டரி பேக்கப் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.