September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய எரிபொருள் துறையில் இந்தியா-அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு

புது தில்லி, செப்.11

புதிய எரிபொருள்களின் ஆய்வு, கண்டுபிடிப்பு, தயாரிப்பு ஆகியவற்றில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்பட முடிவு செய்து செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தில்லியில், அமெரிக்க – இந்திய தூய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கூட்டம் நடைபெற்றது. இதில், பெட்ரோலியத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி மற்றும் அமெரிக்க எரிசக்தி துறை அமைச்சர் ஜெனிபர் கிரான்ஹோம் ஆகியோர், காணொளி காட்சி வாயிலாக பங்கேற்றனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலியத் துறை வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அமெரிக்க-இந்திய தூய்மை எரிசக்தி கூட்டுறவு திட்டத்தின் கீழ், மின்சாரம் மற்றும்எரிசக்தி, எண்ணெய் மற்றும் எரிவாயு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் ஸ்திரமான வளர்ச்சிக்கான செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்து, இத்திட்டத்தில் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத தூய்மையான எரிபொருள்களை கண்டுபிடிப்பதிலும் இந்தியா – அமெரிக்கா இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இதன் வாயிலாக, காற்று மாசற்ற, தூய்மையான புதிய எரிபொருள்களின் கண்டுபிடிப்பு, ஆய்வு, தயாரிப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. இந்த ஐந்து அம்சங்கள் அடிப்படையில், உயிரி எரிபொருள்கள் துறை பணிகளை கண்காணிக்க, கூட்டு செயல் திட்டக் குழு அமைக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.அத்துடன், இந்திய -அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பணிகள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்தியா, 2030ல் 450 கிகாவாட் புதுப்பிக்க எரிசக்தி உற்பத்திக்கான இலக்கை நிர்ணயித்து, தீவிரமாக பணியாற்றி வருவதற்கு, ஜெனிபர் கிரான்ஹோம் பாராட்டு தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love