January 24, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய ஜிடி நியோ ஃபிளாஷ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்கிறது ரியல்மி

ஜிடி நியோ ஃபிளாஷ் என்ற புதிய ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக ரியல்மி தெரிவித்திருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் தெளிவு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட அமோஎல்இடி டிஸ்பிளே இருக்கும் என்றும், மீடியாடெக் Dimensity 1200 SoC சிப்செட் புராஸசருடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரியைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா உட்பட டிரிபிள் கேமரா அமைப்பு இருக்கும் என்றும், அத்துடன் 16எம்பி செல்ஃபீ கேமரா இருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

4500 எம்ஏஎச் டூயல்-செல் பேட்டரியானது 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Spread the love