புதிய எம்ஐ11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.
இந்த மொபைல் அமேசான் மற்றும் mi.com வலைத்தளங்களில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 6.81-இன்ச் WQHD+ தெளிவு,1,440×3,200 பிக்சல் துல்லியம், 20:9 திரைவிகிதம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 480 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 1700 nits பிரைட்நெஸ் கொண்ட டிஸ்பிளேவைப் பெற்றுள்ளது. அத்துடன் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பைப் பெற்றுள்ளது.
இந்த சாதனத்தின் பின்புறம் 1.1-இன்ச் டிஸ்பிளே மற்றும் 126×294 பிக்சல் துல்லியம் கொண்டுள்ளது.
ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி சிப்செட் புராஸசர், அட்ரினோ 660 ஜிபியு திறனுடன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தில் செயல்படும். கேமிங் மற்றும் பல்வேறு ஆப்களைப் பயன்படுத்துவோருக்கு இந்த ஸ்மார்ட்போன் நல்ல தெரிவாக இருக்கும்.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார், 48எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என டிரிபிள் கேமரா அமைப்பு உள்ளது. இந்த பின்புற கேமராக்கள் 8கே மற்றும் 4கே வீடியோ பதிவு வசதிகளைப் பெற்றுள்ளன. முன்புறம் 20எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது.
சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது. அத்துடன் 67 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி சியோமி மி 11 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.69,990-ஆக உள்ளது.