July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் சந்தையில் அறிமுகம்

மும்பை, மே 5

பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் உலகின் பல்வேறு நாடுகளிலும் ஸ்கோடா ஃபேபியா கார் அதிக வரவேற்பை பெற்ற மாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந் நிலையில், முற்றிலும் புதிய கட்டமைப்புக் கொள்கையில் நான்காம் தலைமுறை மாடலாக ஸ்கோடா ஃபேபியா கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில், புதிய தலைமுறை ஸ்கோடா ஃபேபியா கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த காரின் சிறப்பம்சங்களாவது: புதிய ஸ்கோடா ஃபேபியா கார் 4,108 மிமீ நீளம் கொண்டதாக இருக்கிறது. பழைய மாடலைவிட 111 மிமீ கூடுதல் நீளத்துடன் இந்த கார் வந்துள்ளது. அதேபோன்று, வீல் பேஸ் நீளம் 2,564 மிமீ ஆக உள்ளது. பழைய மாடலைவிட 94 மிமீ கூடுதல் வீல் பேஸ் நீளம் கொண்டதாக இருக்கிறது.

முழுமையான எல்இடி யஹட்லைட்டுகள், பனோரமிக் சன்ரூஃப், 18 அங்குல அலாய் வீல்கள் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கிஇன்றன. உட்புறத்தில் 10.25 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 9.2 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில், சாதாரண 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் இதே எஞ்சின் டர்போசார்ஜர் கொண்ட 1.0 லிட்டர் டிஎஸ்ஐ டர்போ மற்றும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் கொண்ட மாடல்களில் கிடைக்கும்.

இதன் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடல் அதிகபட்சமாக 93 பிஎச்பி பவரையும், 175 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. டர்போ பெட்ரோல் மாடலானது 0 – 100 கிமீ வேகத்தை 10.6 வினாடிகளில் எட்டிவிடும். இந்த காரில் லெவல்-2 தானியங்கி டிரைவிங் தொழில்நுட்ப வசதிகள் கொடுக்கப்பட்டு இருப்பது மிக முக்கிய விசயமாக இருக்கும். இந்த காரின் இந்திய வெளியீடு குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.

Spread the love