July 24, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய பங்கு வெளியீடு மூலம் ரூ.3500 கோடி திரட்ட கெம்பிளாஸ்ட் சன்மார் திட்டம்

புது தில்லி, மே 4

சென்னையைச் சேர்ந்த, கெம்பிளாஸ்ட் சன்மார் நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, செபிக்கு விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது குறித்து விரிவான செய்தியாவது:

கெம்பிளாஸ்ட் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதன் மூலம், ரூ.3,500 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது. மேலும், இந்த பங்கு வெளியீட்டின் போது, ரூ.1,500 கோடிக்கு புதிய பங்குகளையும், பங்குதாரர்கள் வசம் இருக்கும், ரூ.2,000 கோடி மதிப்பிலான பங்குகளையும் விற்பனை செய்ய இருக்கிறது.

சிறப்பு வகை ரசாயன தயாரிப்பு நிறுவனமான கெம்பிளாஸ்ட் சன்மார், பாலிவினைல் கு¼ளாரைடு, மருந்து மற்றும் விவசாயம் சம்பந்தமான ரசாயனங்கள் ஆகிய தயாரிப்புகளில் கவனம் செலுத்தி வருகிறது. திரட்டப்படும் நிதியை கொண்டு, முன்னர் வழங்கப்பட்ட பங்குகளாக மாறாத பத்திரங்களை மீட்பது மற்றும் பொதுவான நிர்வாக செலவு ஆகியவற்றுக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.

இதற்கு முன் மும்பை, தேசிய, மெட்ராஸ் பங்கு சந்தைகளில் பட்டியலிடப்பட்டிருந்த இந்நிறுவனம், 2012ம் ஆண்டில் பட்டியலில் இருந்து நீங்கியது.

Spread the love