January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி ஸ்நாப்டீல் செபியிடம் விண்ணப்பம்

புது தில்லி, டிச.22

இணைய வழியிலான வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் ஸ்நாப்டீல் நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு அனுமதி கோரி பங்குச் சந்தை ஒழுங்காற்று அமைப்பான செபியிடம் விண்ணப்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இது குறித்து செய்தியாவது: ரூ.1,250 கோடி மதிப்புக்கு புதிய பங்குகளும், ஓஎஃப்எஸ் முறையில் விற்பனை செய்யப்படும் 3.07 கோடி பங்குகளும் இந்த ஐபிஓ-வில் அடங்கும் என ஸ்நாப்டீல் அளித்துள்ள ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இப்புதிய பங்கு வெளியீட்டின் மூலமாக திரட்டப்படும் நிறுவனத்தின் வளர்ச்சி திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்நாப்டீல் நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை ஆக்ஸிஸ் கேப்பிட்டல், பிஓஎஃப்ஏ செக்யூரிட்டீஸ் இந்தியா, சிஎல்எஸ்ஏ இந்தியா மற்றும் ஜேஎம் பைனான்ஸியல் நிறுவனம் இந்த புதிய பங்கு வெளியீட்டை நிர்வகிக்க உள்ளன.

Spread the love