புதிய பர்பிள் நிறத்தில் ஐபோன்12 மற்றும் ஐபோன்12 மினி ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாக உள்ளது. இதற்கான முன்பதிவு இந்த வாரத்தில் துவங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 30 நாடுகளில் ஏப்.23ம் தேதி இந்த ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய பர்பிள் ஐபோன்12 வேரியண்ட்களுடன் ஏர்டேக்குகளும் அறிமுகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பர்பிள் ஐபோன்12 வேரியண்ட் விலை ரூ.79,900 ஆகவும், ஐபோன்12 மினி விலை ரூ.69,900 ஆகவும் இருக்கும். மேலும் ஒரு ஏர்டேக் விலை ரூ.3,190 ஆகவும், நான்கு ஏர்டேக் பேக்கின் விலை ரூ.10,900 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்.30ம் தேதி இந்த ஏர்டேக்குகள் விற்பனைக்கு வரும். ஏப்.23ம் தேதி இந்த சாதனத்திற்கு முன்பதிவு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐபோன்12 வேரியண்ட்களில் சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் டிஸ்பிளே உள்ளது. பின்புறம் இரட்டை 12எம்பி கேமரா உள்ளது. முன்புறம் 12எம்பி செல்ஃபீ ஷூட்டர் உள்ளது. ஐபோன் 12 வேரியண்ட் 17 மணிநேர பிளேபேக் திறனையும், ஐபோன்12 மினி 15 மணி நேர பிளேபேக் திறனையும் பெற்றுள்ளன. 15வாட் மேக்சேப் வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் 7.5வாட் Qi வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளைப் பெற்றுள்ளன.
ஏர்டேக்குகள் அல்ட்ரா வைட்பேண்ட் தொழில்நுட்பத்தில் செயல்படும். ஐபோன், ஐபேட் மற்றும் ஆப்பிள் வாட்ச்களை இந்த சாதனத்தில் கனெக்ட் செய்ய முடியும். ஐபி67 வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் சான்றிதழைப் பெற்றுள்ளன. இந்த சாதனத்தில் பிளிட் இன் ஸ்பீக்கர் உள்ளது.