January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் கூபே கார் இறுதிக் கட்டத்தில் தயாரிப்பு

புதிய 2 சீரிஸ் கூபே காரின் இறுதிக் கட்ட தயாரிப்புப் பணிகளில் பிஎம்டபிள்யூ நிறுவனம் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

இணையத்தில் வெளியாகி உள்ள 2 சீரிஸ் கூபே காரின் படங்கள் தயாரிப்புப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதை வெளிப்படுத்துகின்றன.

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் ரேஸ் ட்ராக்கில் சோதனை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பேக் வீல் டிரைவ் அம்சத்துடன் இந்தக் கார் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ஆற்றல்மிக்க இன்-லைன் 6-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கூபே காரின் வணிக ரீதியான தயாரிப்புப் பணிகளை பிஎம்டபிள்யூ நிறுவனம் நடப்பு 2021ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள படங்களில் கார் முழுவதும் மறைப்பால் மறைக்கப்பட்டுள்ளதால் காரில் வழங்கப்படவுள்ள டிசைன் அம்சங்கள் குறித்துத் தெரியவரவில்லை எனவும், இருப்பினும் இந்த சோதனை மாடலில் இரு கதவுகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் காரின் சோதனை பிரபலமான நர்பர்கிங் ரேஸ் ட்ராக்கில் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சோதனை ஓட்டத்தின் மூலம் காரின் சஸ்பென்ஷன் மட்டுமின்றி சேசிஸ், டேம்பிங், ஸ்டேரிங் மற்றும் ப்ரேக்கிங் அம்சங்களின் செயல்பாடு சோதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

புதிய 2 சீரிஸ் கூபே காரில் அதன் எம் வெர்சனும் தயாரிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூபே காரில் இன்-லைன் 6-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆனது பிஎம்டபிள்யூ டபுள் பவர் டர்போ தொழில்நுட்பத்துடன் ஆற்றலை காருக்கு வழங்கும்.

இந்த என்ஜின் அதிகபட்சமாக 374 எச்பி பவரை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ஸ்போர்ட் ட்ரான்ஸ்மிஷனின் உதவியுடன் ஆல்வீல் டிரைவ் அம்சமும் வழங்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Spread the love