August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய பென்ஸ் ஜிஎல்ஏ கார் மெர்சிடிஸ் அறிமுகப்படுத்துகிறது

புதிய பென்ஸ் ஜிஎல்ஏ சொகுசு எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது மெர்சிடிஸ் நிறுவனம்.

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எண்ட்ரி லெவல் சொகுசு காருக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் விதமாக, புதிய தலைமுறை ஜிஎல்ஏ காரை மெர்டிஸ் நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த வாரத்திலேயே புதிய பென்ஸ் ஜிஎல்ஏ கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.

கம்பீரமான பானட், 20 இன்ச் அலாய் வீல்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்டது போன்ற முகப்பு கிரில் அமைப்பு, புதிய எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் எல்இடி பகல்வேளை விளக்குகள் உள்ளன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ காரில் 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் என்ஜின் ஆப்சன்கள் தரப்பட்டுள்ளன. பெட்ரோல் என்ஜின் 163 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் என்ஜின் 190 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் 220டீ டீசல் என்ஜினுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொடுக்கப்பட உள்ளது. இந்த மாடலானது ஏஎம்ஜி வெர்ஷனில் வர இருக்கிறது. மேலும், டீசல் மாடலின் ஃப்ரண்ட் வீல் டிரைவ் மாடலானது புராகிரெஸ்ஸிவ் என்ற வேரியண்ட்டில் கிடைக்கும். இதன் பெட்ரோல் என்ஜின் ரெனோ – நிஸான் கூட்டணியில் உருவாக்கப்பட்டதாகும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி மாடலானது பிஎம்டபிள்யூ எக்ஸ்1, வால்வோ எக்ஸ்சி40, மினி கன்ட்ரிமேன் உள்ளிட்ட ஆரம்ப ரக சொகுசு எஸ்யூவி மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Spread the love