August 14, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய போட் ஏர்டோப்ஸ் 701 ரூ.3,999 விலையில் அறிமுகம்

ஏர்டோப்ஸ் 701 என்ற பெயரில் புதிய ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது போட் நிறுவனம்.

வயர்லெஸ் ஸ்பீக்கர்கள், ஹெட்செட்டுகள் மற்றும் இயர்போன்கள் தயாரிப்பில் தொடர்ந்து புதுமையான தயாரிப்புகளை போட் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சாதனத்தை அமேசான் இந்தியா இணையதளம் மற்றும் போட் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆர்டர் செய்யலாம்.

இந்த சாதனத்தை 15 மீட்டர் தூரம் வரை உள்ள சாதனங்களுடன் ப்ளூடூத் வாயிலாகக் கனெக்ட் செய்யலாம்.

இந்த ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் மாடலானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி, லேப்டாப், மியூசிக் பிளேயர் மற்றும் ப்ளூடூத் வசதி உள்ள பிற சாதனங்களுடன் கூட இணைக்க முடியும்.

அதபோல் இந்த புதிய சாதனம் 9 மிமீ டிரைவர்களைக் கொண்டுள்ளது. மிகவும் எளிமையான வடிவமைப்பில் காணப்படுகிறது.

ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தில் ஏஎன்சி மோட், சுற்றுப்புற ஒலிக்கான கிரிஸ்டல் மோட் வசதிகள் இருப்பதால் சிறந்த ஆடியோ அனுபவம் கிடைக்கும். அத்துடன் கேமிங் அனுபவத்திற்காக பீஸ்ட் மோட் உள்ளிட்ட பல மோட்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளன.

ஸ்வெட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் ஐபிஎக்ஸ் 7 சான்றிதழ் தரப்பட்டுள்ளது. இதன் கேஸ் 550 எம்ஏஎச் பேட்டரி யூனிட் உடன் வருகிறது. பின்பு ஒவ்வொரு பட்டிலும் 50 எம்ஏஎச் பேட்டரி உள்ளது என அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஏர்டோப்ஸ் 701 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் சாதனத்தின் விலை ரூ.3,990-ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love