ரெட்மி நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந் நிறுவனம் அறிமுகப்படுத்தும் இரண்டாவது ஸ்மார்ட் வாட்ச் ஆக இது இருக்கும்.
வரும் மே 13 அன்று ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனுடன் இணைந்து இந்த ஸ்மார்ட் வாட்சை அறிமுகம் செய்யவுள்ளது சியோமி.
WearYourVibe என்ற ஹேஷ்டேக் உடன் டீசர் ஒன்றை சியோமி வெளியிட்டுள்ளது. டுவிட்டரில் வெளியிடப்பட்ட வீடியோவில் இந்த ஸ்மார்ட் வாட்சின் தோற்றம் டீஸ் செய்யப்பட்டுள்ளது.
கடந்தாண்டில் முதல் ரிஸ்ட் பேண்ட் ஸ்மார்ட் சாதனத்தை ரெட்மி அறிமுகப்படுத்தியது.
இந்த ஸ்மார்ட்வாட்ச் இந்திய சந்தையில் சுமார் ரூ.3000 – ரூ.3500 என்ற விலையில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை.
செவ்வக வடிவில் இருக்கிறது. இது செவ்வக வடிவத்தில் 1.4 இன்ச் எல்இடி டிஸ்ப்ளேவுடன், 320 × 320 பிக்சல் துல்லியம், 23 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 60% என்டிஎல் கலர் ரேஞ்ச் உடன் வரும்.
வாட்டர் ரெசிஸ்டெண்ட் வசதியைப் பெற்றிருக்கும். 24 மணிநேர நேரடி இதய துடிப்பு கண்காணிப்பு, தூக்கக் கண்காணிப்பு வசதிகளைக் கொண்டுள்ளது. கேமிங் மானிடர் வசதியும் உள்ளது. அதேபோல் இதில் 11 விளையாட்டுகளுக்கு கனெக்டிவிட்டி உள்ளது. இது நடைபயிற்சி, மலையேற்ற்ம, ரன்னிங், டிரெட்மில், சைக்கிளிங், நீச்சல், கிரிக்கெட் கண்காணிப்பு அம்சங்களைப் பெற்றுள்ளது.
சாதாரண பயன்பாட்டில் 9 நாட்கள் வரை பேட்டரி திறனைப் பெற்றிருக்கும். இதில் 230 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. ஆண்ட்ராய்டு 5.0 இயங்குதளத்தில் செயல்படும். புதிய ரெட்மி வாட்ச்சில் ஜியோமேக்னடிக், கைரோஸ்கோப், ஆல்டிமீட்டர் மற்றும் திசைகாட்டி சென்சார் உள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் ஆனது எலிகண்ட் பிளாக், இங்க் ப்ளூ, ஐவரி ஒயிட் வண்ணங்களில் கிடைக்கும்.