May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய ரோட்லார்க் எலெக்ட்ரிக் சைக்கிள் நெக்ஸூ நிறுவனம் அறிமுகப்படுத்தியது

100 கி.மீ. பயணத் திறன் கொண்ட புதிய எலெக்ட்ரிக் சைக்கிளை நெக்ஸூ நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் ரோட்லார்க் என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் அல்லது நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக ஆர்டர் செய்து வாங்கலாம்.

இந்த சைக்கிளில் பொருத்தப்பட்டுள்ள பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 100 கிமீ தூரம் வரை பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் இரண்டு லித்தியம் அயனி பேட்டரிகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒன்று சீட்டுக்குக் கீழேயும் மற்றொரு பேட்டரி ஃப்ரேமிலும் பொருத்தப்பட்டுள்ளது. சீட்டின் கீழ் உள்ள 8.7kWh பேட்டரியைக் கழற்றி மாட்ட முடியும். அதேவேளையில் ஃப்ரேமில் பொருத்தப்பட்டுள்ள 5.2Ah பேட்டரியை கழற்ற முடியாது.

இரண்டு பேட்டரிகளையும் வீட்டிலேயே சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த சைக்கிளில் மின் மோட்டாரைப் பயன்படுத்தியோ அல்லது பெடலிங் செய்தோ இயக்க முடியும். இந்த சைக்கிளில் 250W திறன் கொண்ட பிரஷ்லெஸ் டிசி எலெக்ட்ரிக் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இதில் இரண்டு ரைடிங் மோடுகள் உள்ளன. பெட்லெக் மோடில் அதிகபட்சமாக 100 கிமீ தூரம் வரையிலும், த்ராட்டில் மோடில் அதிகபட்சமாக 75 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்வதற்கு 3 முதல் 4 மணிநேரம் பிடிக்கும்.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் த்ராட்டில் மோடில் அதிகபட்சமாக மணிக்கு 25 கிமீ வேகம் வரை செல்லும்.

இந்த சைக்கிளில் கோல்டு ரோல்டு ஸ்டீல் சேஸிஸ் பொருத்தப்பட்டுள்ளது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் ஸ்விங் ஆர்ம் அமைப்புடன் பின்சக்கரம் ஃப்ரேமுடன் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் 26 இன்ச் ஸ்போக்குகள் கொண்ட சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. நாபி காட்டன் ட்யூப் டயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஹை டென்சிட்டி ஃபோம் கொண்ட சீட் தரப்பட்டுள்ளது.
இந்த எலெக்ட்ரிக் சைக்கிளில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகள் உள்ளன. மேலும், ஹேண்டில்பாரில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரும் இடம்பெற்றுள்ளது.

இந்த மின்சார சைக்கிளில் எல்இடி ஹெட்லைட்டுகள் பொருத்தப்பட்டுள்ளது. இது இரவு நேரத்தில் கூடுதல் பாதுகாப்பை வழங்கும். கருப்பு, நீலம், சிவப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.

புதிய ரோடுலார்க் எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு ரூ.42,000 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீண்டதூர சைக்கிள் ரைடர்களுக்கு இந்த சைக்கிள் சிறப்பான தேர்வாக இருக்கும்.

Spread the love