August 4, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய விட்பிளேன் 701 லிமிடெட் எடிசன் ஹஸ்க்வர்னா நிறுவனம் வெளியிட்டது

புதிய விட்பிளேன் 701 பைக்கின் ஸ்பெஷல் எடிசன் தொடர்பான விபரங்களை ஹஸ்க்வர்னா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த ஹஸ்க்வர்னா மோட்டார்சைக்கிள் நிறுவனம் இத்தாலிய ஜவுளி பிராண்டான ரீப்ளே (REPLAY) உடன் கடந்த ஆண்டில் கூட்டுறவு ஏற்படுத்தியது. இந்தக் கூட்டுறவில் விட்பிளேன் 701 மோட்டார் சைக்கிள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

701 சூப்பர்மோட்டோ மற்றும் 701 எண்டூரோ எல்ஆர் என்ற இரண்டு லிமிடெட் எடிசன்களை ஹஸ்க்வர்னா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவை உலக அளவில் தலா 10 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளன.

அதனால் இந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குபவர்கள் ஸ்பெசலாக உணரலாம்.

இந்த பைக்குகளில் 692.7சிசி லிக்யுடு-கூல்டு, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 75 பிஎச்பி பவர் மற்றும் 72 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. ரைடு-பை-வயர் ஃப்யூவல் இன்ஜெக்சன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
விட்பிளேன் 701 லிமிடெட் எடிசன்களில் அபெக்ஸ் சஸ்பென்ஷன் மற்றும் ப்ரேம்போ பிரேக்குகள் பொருத்தப்படுகின்றன. 701 சூப்பர்மோட்டோ பைக்கை சாதாரண சாலைகளிலும், பந்தய ட்ராக்குகளில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

அதேவேளையில் எண்டூரோ எல்ஆர் மோட்டார் சைக்கிள் ஆஃப்-ரோடு வாகனமாக இருக்கும். இந்தப் பைக்குகள் சில குறிப்பிட்ட சந்தைகளில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஒருவருக்காவது இந்தப் பைக்குகளில் ஏதேனும் ஒன்று கிடைக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Spread the love