புதிய விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் மாடலை வியட்நாமில் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் இந்த சாதனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கருப்பு மற்றும் நீல நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.51-இன்ச் எச்டி பிளஸ் தெளிவு, 720 x 1600 பிக்சல் துல்லியம், 20:9 என்ற திரைவிகிதம் கொண்ட ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது.
மேலும் 1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் புராஸசருடன் FuntouchOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் செயல்படும்.
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரியைக் கொண்டுள்ளது. அத்துடன் மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா, 2எம்பி செகண்டரி கேமரா என டூயல் கேமரா உள்ளது. முன்புறம் 8எம்பி செல்ஃபீ கேமரா உள்ளது. எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சங்களும் உள்ளன.
மேலும் இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. அத்துடன் ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் வசதிகளும் உள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.10,445 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.