January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் ஏப்ரல் மாதத்தில் குறைந்தது

கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

ஆன்லைன் வேலைவாய்ப்பு தகவல் நிறுவனமான, ‘மான்ஸ்டர்’ நடத்திய ஆய்வில், நடப்பாண்டு மார்ச் மாதத்துடன் ஒப்பிடும் போது, ஏப்ரல் மாதத்தில் புதிய வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகள் 3 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலும் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகள் 4 சதவீதம் வரை குறைந்திருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. வேலைவாய்ப்பு தளங்களில் வெளியிடப்படும் வேலைவாய்ப்பு தொடர்பான அறிவிப்புகளின் அடிப்படையில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

கொரோனா அலை பாதிப்பு காரணமாக வேலைவாய்ப்பு அறிவிப்புகள் வெளியிடப்படுவது குறைந்திருந்தாலும், குறிப்பிட்ட நகரங்களில் குறிப்பிட்ட சில துறைகளில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய நகரங்களில், விளம்பரம், சந்தை ஆய்வு, மக்கள் தொடர்பு ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பு தகவல்கள் அதிகரித்துள்ளதாகவும், கொல்கத்தாவில் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் சார்ந்த வேலைவாய்ப்புகள் அதிகரித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

மேலும் நகரங்களின் அடிப்படையில் சென்னை மற்றும் பெங்களூருவில் கடந்த ஏப்ரல் மாதத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்புகள் அதிகரித்துள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love