July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதிய ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் ட்ரையம்ப் அறிமுகப்படுத்துகிறது

புதிய அப்டேட் 900 ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்கை ட்ரையம்ப் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது. அத்துடன் இதன் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் லிமிடெட் எடிசன் பைக்கையும் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த ஸ்பெஷல் எடிசன் வெறும் 775 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களை ட்ரையம்ப் நிறுவனம் மிகவிரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2017ம் ஆண்டிலிருந்து சில சர்வதேச சந்தைகளில் ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இரட்டை எக்ஸாஸ்ட்-குழாய் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்கள் 2021 ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் பைக்குகளிலும் தொடரப்பட்டுள்ளன. அதேபோல் பைக்கின் ஹெட்லைட் & நெக் பகுதியில் மற்றும் பயணிகளின் கால்களை எக்ஸாஸ்ட் குழாயில் இருந்து பாதுகாக்கும் பகுதியில் அலுமினியம் ஃபினிஷ் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்தப் பைக்கை மாற்றியமைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்காக 120 ஒரிஜினல் ஆக்சஸரீகளும் வழங்கப்பட்டுள்ளன. புதிய ட்ரையம்ப் ஸ்ட்ரீட் ஸ்க்ரம்ப்ளர் பைக் மேட் அயர்ன் ஸ்டோன் உடன் ஜெட் ப்ளாக், அர்பன் கிரே மற்றும் மேட் காக்கி என மூன்று நிறங்களில் அறிமுகமாகவுள்ளது.

இந்தப் பைக்கில் 900சிசி லிக்யூடு கூல்டு, இன்லைன் இரட்டை என்ஜின் அதிகபட்சமாக 65 எச்பி மற்றும் 80 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

பிரேக்கிங்கைப் பொருத்தவரை ஒற்றை முன்பக்க டிஸ்க் & ப்ரெம்போ காலிபர் தொடர்கிறது. ஏபிஎஸ் மற்றும் ஸ்விட்ச்சபிள் ட்ராக்‌ஷன் கண்ட்ரோல் வசதியுடன் இம்பொலைசர் மற்றும் யுஎஸ்பி சாக்கெட் வழங்கப்பட்டுள்ளது.

இதன் சக்கரங்களில் மெட்ஸெலர் டூரன்ஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரெய்ன், ரோடு மற்றும் ஆஃப் ரோடு ஆகிய மூன்று ட்ரைவிங் மோட்களை கொண்டுள்ளது.

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட ரூ.9.79 லட்சமாகும். வெறும் 775 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள ஸ்ட்ரீட் ஸ்க்ராம்ப்ளர் சாண்ட்ஸ்ட்ரோம் எடிசன் பிரத்யேகமான மேட் ஸ்டோர் கிரே நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷல் எடிசன் ட்ரையம்ப் பைக்கின் விலை இந்திய மதிப்பில் ரூ.10.42 லட்சம் ஆக உள்ளது.

Spread the love