June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புதுக்கோட்டை மாவட்ட விவசாயி களுக்கு மார்தாண்டபுரத்தில் தேனீ வளர்ப்பு பயிற்சி

புதுக்கோட்டை, ஜூன் 17

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி வட்டாரம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) 2022-2023ம் ஆண்டு மாநில விரிவாக்க திட்டங்களின் உறுதுணை திட்டத்தின் கீழ் அறந்தாங்கி வட்டார விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு என்ற தலைப்பில் உள் மாநிலத்திற்குள்ளான விவசாயிகள் 3 நாள் பயிற்சியாக கன்னியாக்குமரி மாவட்டம் மார்தாண்டபுரத்தில் உள்ள ஒய்.எம்.சி.எ.தேனீ வளர்ப்பு பயிற்சி நிலையத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகளை அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டது.

இப்பயிற்சிக்கு இராம.சிவக்குமார், திட்ட இயக்குநர் (அட்மா), வேளாண்மை இணை இயக்குநர், புதுக்கோட்டை தலைமை வகித்து இப்பயணத்தை துவக்கி வைத்தார். அறந்தாங்கி வட்டார வேளாண்மை வேளாண்மை உதவி இயக்குநர் சி.பாஸ்கரன், வழிகாட்டுதலின்படி விவசாயிகளை அழைத்து செல்லப்பட்டது. பிறகு கன்னியாக்குமரி மாவட்டம் மார்தாண்டபுரத்தில் உள்ள ஒய்.எம்.சி.எ.தேனீ வளர்ப்பு பயிற்சி நிலையத்திற்கு விவாயிகளை அழைத்து சென்று சுர்ஜித், அந்நிலைய பயிற்சியாளர், அஜித், தேனீ வளர்க்கும் போது கடைபிடிக்க வேண்டிய முறைகள், தேனீக்களின் வகைகள், தேனீ வளரும் பருவநிலைகள் மற்றும் சூழ்நிலைகள், தேனீக்களின் குணாதிசயங்கள், வாழ்கை முறைகள், தேனீக்களை கையாளுதல் முறைகள், தேனீக்கள் தேன் சேகரிக்கும் முறைகள் குறித்தும், தேனில் இருக்கும் நன்மைகள், மருத்துவ குணங்கள், தேனீகளினால் வேளாண்மை மற்றும் தோட்டக்கலை பயிர்களுக்கு ஏற்படும் நன்மைகள், தேனீ வளர்ப்பில் கடைபிடிக்க வேண்டிய முக்கிய தொழில்நுட்பங்கள் குறித்தும் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். பின்பு தேனீக்களை கையாளுதல் முறைகள், தேன் எடுப்பது அதை சுத்திகரித்து பதப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு செயல்விளக்க மூலமாக நேரடியாக காண்பிக்கப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது. இறுதியல் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட்டு விவசாயிகளின் சந்தேகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. பயிற்சி முடிவில் அட்மா வட்டார விவசாய ஆலோசனைக்குழுத்தலைவர் துரைக்கன்ணு நன்றி கூறினார். முன்னதாக அறந்தாங்கி வட்டார தொழில்நுட்ப மேலாளர் சி.ரவிராஜன், வரவேற்றார். இவருடன் உதவி தெமாழில்நுட்ப மேலாளர் ராஜூ ஆகியோர் வழிநடத்தி விவசாயிகளை அழைத்துசென்று வந்தனர். இப்பயிற்சியில் அறந்தாங்கி, திருவரங்குளம், கறம்பக்குடி, புதுக்கோட்டை, அன்னவாசல், திருமயம், மற்றும் அரிமளம் வட்டாரகளிலிருந்து 40 விவசாயிகள் பயிற்சில் கலந்துகொண்டார்கள்.

Spread the love