புரசு அடர்ந்த பளபளப்பான பெரிய இலைகளையும், செந்நிற மலர்களையும், அகன்ற தட்டையான விதைகளையும், உடைய நடுத்தர உயரம் உடைய மரம். மலர் அழகுக்காக சாலையோரங்களில் வளர்ப்பது உண்டு. இலை, மலர், பட்டை, பிசின் ஆகியவை மருத்துவப் பயனுடையவை. இலை, சிறுநீர் பெருக்கும், உடல் உரமாக்கும். திசுக்களை இறுகச் செய்யும். காமம் பெருக்கும். மலர், காமம், சிறுநீர் பெருக்கும், விதை குடற்புழு கொல்லும். மலமிளக்கும் பட்டை திசுக்களை இறுகச் செய்யும். காமம் பெருக்கும், உடல் உரமாக்கும், பிசின், காமம் பெருக்கும். உடல் உரமாக்கும் இலைச்சாறு 10 மில்லி காலை, மாலை பருகி வர வயிற்றுப்போக்கு, சீதபேதி, இருமல் காய்ச்சல் ஆகியவை தீரும். இலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து வடிகட்டி மலக்குடலில் செலுத்தி கழுவிய வயிற்றுப்போக்கு சீதபேதி ஆகியவை தீரும். இதனை கொண்டு வாய் கொப்பளிக்க, வாய்ப் புண் தீரும். கருப்பை உட்செலுத்தி கழுவ வெட்டை போக்கு நிற்கும். அரைத்தேக்கரண்டி இலை பொடி தேனில் குழைத்து காலை, மாலை சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு, வயிற்றுவலி, மூலம் ஆகியவை தீரும். இலையை அரைத்து அனலில் வெதுப்பி பற்றுப்போட கட்டி பருப்பு அரையாப்புக் கட்டி வீக்கம் ஆகியவை தீரும். விதையை எலுமிச்சைச் சாற்றில் அரைத்து பற்றுப்போட படர்தாமரை, அரிப்பு, படை, கரப்பான் ஆகியவை தீரும். 25 மில்லி பட்டை சாற்றுடன் சம அளவு இஞ்சிச் சாறு கலந்து பாம்புக்கடிக்கு வழங்கலாம். 50 கிராம் பட்டையை சிதைத்து அரை லிட்டர் நீரிலிட்டு 150 மிலி ஆகும் வரை காய்ச்சி வடிகட்டி 50 மில்லியாக மூன்று வேளை நாள்தோறும் பருகி வர நீர் கோவை, இருமல், தடுமன் ஆகியவை தீரும். ஒரு துண்டு பட்டையை சிறிது சர்க்கரை சேர்த்து மென்று விழுங்க மிகையான நீர் விடாய் அதாவது தாகம் தணியும். பிசின் பொடியுடன் பாதி அளவு கிராம்பு பொடி கலந்து வைத்துக்கொண்டு ஒரு கிராம் அளவாகக் காலை, மாலை தேனில் கலந்து சாப்பிட்டு வர வயிற்றுப் போக்கு, சீதபேதி ஆகியவை குணமாகும். நீண்ட நாள் பயன்படுத்த என்புருக்கி ரத்த சிறுநீர், ரத்த வாந்தி ஆகியவை தீரும்.
புரசு

Spread the love