May 17, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புளித்த மோர் கரைசல் இயற்கை உள்நாட்டு விவசாய முறை

மதுரை, மார்ச் 15

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பகுதியில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நான்காம் ஆண்டு பயிலும் மாணவர்கள் அரவிந்த், சந்திரகுப்தன், ஜெயப்பிரகாஷ், உலகசெல்வன், சண்முகம், லோகேஷ்வரன், செந்தில், கணேஷ், சக்திவேல் ஆகியோர் ஊரக வேளாண்மை பணி அனுபவத் திட்டத்தின் கீழ் வாடிப்பட்டியில் தங்கி பயின்று வருகின்றனர்.
இவர்கள் மேட்டு நீரேத்தான் கிராம விவசாயி நாராயணனிடம் புளித்த மோர் கரைசல் எப்படி தயார் செய்வது என்று கற்றுக் கொண்டனர்.

தேவையான பொருட்கள் :

ஏழு நாட்கள் புளித்த மோர்- 5 லிட்டர்

தேவையான உபகரணங்கள் :

10 லிட்டர் பிளாஸ்டிக் டிரம் 1 அல்லது 10 லிட்டர் மண்பானை – 1

தயாரிப்பு முறை :
2 லிட்டர் மோரில் 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மோர் தயிர் செய்து கொண்டு, பிளாஸ்டிக் டிரம்மில் அல்லது மண்பானையில் நிழலான இடத்தில் மூடி வைக்க வேண்டும்.

கவனிக்க வேண்டியவை :
வெண்ணெய் எடுத்த மோரை பயன்படுத்த வேண்டும். மழைநீர் படாதவாறு நிழலில் வைக்கவேண்டும். நாய், பெருச்சாளி சேதப்படுத்தாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பயன்படுத்தும் முறை :

10 லிட்டர் தண்ணீரில் 500 மி.லி புளித்த மோர் கரைசலை கலந்து பயன்படுத்தலாம்.

பயன்கள் :
மோர் கரைசலில் ஜிப்ரலிக் அமிலம் எனும் வளர்ச்சி ஊக்கி உள்ளது. பயிர்கள் பூ பிடிக்கும் முன்பும், பூ பிடித்த பின்பும் தெளிப்பதனால் பிஞ்சு உதிர்வதை தவிர்த்து வளர்ச்சியை மேம்படுத்தலாம். நெல் பயிர் பால் பிடிக்கும் சமயத்தில் தெளிக்கலாம். வைரஸ் மற்றும் பூஞ்சை நோய்களை நன்றாகக் கட்டுப்படுத்தலாம்.

பயன்படுத்தும் காலம் :
மோர் கரைசல் தயாரான 7 நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம். தினமும் ஒரு முறை கலக்கி விடவேண்டும்.

குறிப்பு :

வீடுகளில் மீதமாகும் மோரை வீணாக்காமல் தோட்டத்தில் ஒரு பானையில் ஊற்றி சேமித்து வைக்க வேண்டும். மோர் எவ்வளவு புளித்தாலும் அது பாதகம் இல்லை. எவ்வளவு பிடிக்கிறதோ அவ்வளவு நல்லது தான்.

Spread the love