May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

புளி விளைச்சல் அதிகரிப்பு

இராமநாதபுரம், ஏப்.23

பருவமழையால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால், புளி விளைச்சல் அதிகரித்து உள்ளது.

இராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலம் சுற்றுப்புற பகுதி கிராமங்களில், பட்டா இடங்கள், கண்மாய் கரைகள் மற்றும் ரோட்டோரங்களில், அதிகளவில் புளியமரங்கள் உள்ளன. கடந்த சில

ஆண்டுகளாக நிலவிய கடும் வறட்சியால், இப்பகுதியில் புளிய மரங்களில் போதிய மகசூல் இன்றி பாதிப்படைந்து இருந்தது. கடந்த நவம்பர் முதல் ஜனவரி வரை பெய்த கனமழையால்

மாவட்டத்தில், கண்மாய் மற்றும் குளங்களில் நீர் நிரம்பி நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. இதனால் நடப்பு ஆண்டில் புளிய மரங்களில் மகசூல் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுகளை விட

விளைச்சல் அதிகரித்துள்ளதால், புளி விலை குறையும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

Spread the love