July 25, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்களின் விலை உயர்வு

விழுப்புரம், ஜூலை 22

ஆடி மாதத்தை முன்னிட்டு, திண்டிவனத்தில் பூக்களின் விலை உயர்ந்தது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் மலர் அங்காடியில் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலிருந்து அனைத்து வகை பூக்களும் விற்பனைக்குக் கொண்டு வரப்படுகிறது. ஆடி மாதம் துவங்கியதால் அதிகளவில் விசேஷம் நடப்பது வழக்கம். இதன் காரணமாக ஆடி மாதத்திற்கு முன் பூக்களின் விலை குறைவாக இருந்த நிலையில், தற்போது அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்தன. கடந்த மாதம் கிலோ ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்ட குண்டு மல்லி புதன்கிழமை அன்று ரூ.200க்கும், 100க்கு விற்பனையான முல்லை ரூ.150க்கும் விற்பனையானது. அதே போல் ரூ,300க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ.600, 30க்கு விற்பனையான சம்பங்கி ரூ.120, 60க்கு விற்பனையான சாமந்தி ரூ.100, 20க்கு விற்பனையான கோழிக்கொண்டை ரூ.40, 40க்கு விற்பனையான ரோஸ் ரூ.60 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டன.

இது குறித்து வியாபாரிகள் தரப்பில் கூறியதாவது, ஆடி மாதம் துவங்கியதாலும், பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும், அனைத்து பூக்களின் விலைகளும் உயர்ந்துவிட்டது என தெரிவித்தனர்.

Spread the love