August 13, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்கள் விற்பனை கடும் பாதிப்பு

கிருஷ்ணகிரி, மே 10

ஒசூரில் பூக்கள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளதால் விவசாயிகள், வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் 150க்கும் மேற்பட்ட பூக்கள் விற்பனை அங்காடிகள் உள்ளன. இங்கு தினமும் 150 டன்னுக்கும் அதிகமாக ரோஸ், பட்டன்ரோஸ், குண்டுமல்லி, செண்டு மல்லி, அரளி, ஜெர்பரா, சாமந்தி, மேரிகோல்டு என பலவகை பூக்கள் விற்பனை நடைபெற்று வந்தது.

கர்நாடக மாநிலம் பெங்களுரு, ஆனைக்கல், மாலூர், கோலார் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஆந்திர மாநிலம் சித்தூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் அதிகமான வியாபாரிகள் ஒசூர் வந்து பூக்களை வாங்கிச் செல்கின்றனர். அதேபோல கேரள மாநிலத்துக்கும் பூக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

இந்நிலையில், தற்போது கரோனா பரவுவதால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் ஒசூரில் இருந்து வெளியூா்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் பூக்களை அனுப்ப முடியால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். மேலும் உள்ளூர் மக்களும் நோய்த் தொற்று காரணமாக அதிகளவில் பூக்களை வாங்க சந்தைக்கு வருவதில்லை என்பதால் பூக்கள் மூட்டை மூட்டையாக தேக்கமடைந்துள்ளன.

விவசாயிகள் நேரிடையாக அண்டை மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் சுமார் 200 டன் முதல் 250 டன் வரை அனுப்பி வந்தனர். அண்டை மாநிலங்களில் கரோன காரணமாக உள்ள தடையால், திருமண நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள் பெருமளவில் குறைந்துள்ளதாலும் பூக்களை வாங்க வியாபாரிகள் வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் ஒசூர் பூக்கள் சந்தை வெறிச்சோடிக் காணப்படுகிறது.

Spread the love