June 29, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூக்கள் விலை கடும் சரிவு

கரூர், ஏப்.22

பூக்கள் விலை சரிவால், விவசாயிகள் கடுமமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, உடையதோட்டம் ஆகிய பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சின்ன ரோஜா, விரிச்சி பூக்கள்

தற்போது செடிகளில் பூத்து வருகிறது. கரோனா விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டதால், வெளி இடங்களுக்கு பூக்கள் கொண்டு செல்லும் தோய்வு ஏற்பட்டுள்ளது. மேலும் பூக்கள் வரத்து

அதிகரித்தும், திருவிழாக்கள் மற்றும் விசேச நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்கள் தேவை குறைந்துள்ளது. இதனால் பூக்கள் விலை சரிந்து விற்பனை நடக்கிறது. சின்ன ரோஜா கிலோ,

ரூ.100லிருந்து சரிந்து, ரூ.50க்கும், விரிச்சி பூ கிலோ, ரூ.40லிருந்து ரூ.20க்கும் விற்பனையாகிறது. விலை இல்லததால், விவசாயிகள் பூக்கள் பறிக்கும் பணியில் ஈடுபடாமல் உள்ளனர்.

Spread the love