September 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை முதல்வர் தொடங்கிவைத்தார்

ஒருகாலப்‌ பூஜைத் திட்டத்தின்கீழ்‌ உள்ள 12,959 திருக்கோயில்களில்‌
பணிபுரியும்‌ அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌, பூசாரிகளுக்கு மாத ஊக்கத்‌
தொகை வழங்கும்‌ திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர்‌
மு.க.ஸ்டாலின்‌ அவர்கள்‌ தொடங்கி வைத்தார்‌.

தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க.ஸ்டாலின்‌ சனிக்கிழமை
(11.9.2021) சென்னை, திருவான்மியூர்‌ அருள்மிகு மருந்தீஸ்வரர்‌ திருக்கோயில்‌
திருமண மண்டபத்தில்‌ ஒருகாலப்‌ பூஜைத்‌ திட்டத்தின்கீழ்‌ உள்ள 12,959
திருக்கோயில்களில்‌ பணிபுரியும்‌ அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌, பூசாரிகளுக்கு
மாத ஊக்கத்தொகை வழங்கும்‌ திட்டத்தை தொடங்கி வைத்தார்‌.

கொரோனா பெருந்தொற்றுக்‌ காலத்தில்‌ திருக்கோயில்களில்‌ பணிபுரியும் ‌
அர்ச்சகர்கள்‌ சந்தித்தப்‌ பொருளாதார நெருக்கடியைக்‌ கருத்தில்‌ கொண்டு அதில்‌
இருந்து அவர்களையும்‌, அவர்கள்‌ குடும்பத்தினரையும்‌ மீட்டெடுக்கும்‌ பொருட்டு
துறையின்‌ நிர்வாகக்‌ கட்டுப்பாட்டின்கீழ்‌ உள்ள திருக்கோயில்களில்‌ நிலையான
மாத வருவாயின்றிப்‌ பணியாற்றி வந்த அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌,
பூசாரிகளுக்கு அரிசி மற்றும்‌ மளிகைப்‌ பொருள்களுடன்‌ ரூ.4,000 உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதன்மூலம்‌ சுமார்‌ 11,065 திருக்கோயில்‌ அர்ச்சகர்கள்‌ மற்றும்‌ பணியாளர்கள்‌ பயன்பெற்றுள்ளனர்‌. மேலும்‌, அர்ச்சகர்கள் மற்றும்‌ திருக்கோயில்‌ பணியாளர்களுக்கான குடியிருப்புகள்‌ 6 இடங்களில் ரூபாய்‌ 21 கோடியே 40 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ கட்டித்‌ தரப்படும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளதும்‌ குறிப்பிடத்தக்கது.

திருக்கோயில்களில்‌ பணிபுரியும்‌ அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌, பூசாரிகள்‌ மாத வருவாயின்றிப்‌ பணியாற்றி வந்தது தெரியவந்தது. அதன்படி, கடந்த 4.9.2021 அன்று இந்து சமய அறநிலையத்துறையின்‌ மானியக்‌ கோரிக்கையின்போது ஒருகாலப்‌ பூஜை திட்டத்தின்கீழ்‌ உள்ள 12,959 திருக்கோயில்களில்‌ பணிபுரியும்‌ அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத்‌ தொகையாக ரூபாய்‌ 1,000/- வழங்கப்படும்‌ என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினைச்‌ செயல்படுத்தும்‌ விதமாகச்‌ சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர்‌ திருக்கோயில்‌ திருமண மண்டபத்தில் மாத
ஊக்கத் தொகை வழங்கும்‌ திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

சட்டமன்றத்தில்‌ திட்டத்தை அறிவித்து ஒரு வாரம்தான்‌ ஆகிறது. இன்னும்‌
சட்டமன்றமே முடியவில்லை, 13ஆம்‌ தேதிதான்‌ முடிவடைகிறது. சட்டமன்றத்தில் ‌
அறிவித்து ஒரு வாரம்‌ ஆவதற்கு முன்னாலேயே இந்தத்‌ திட்டத்தைச்‌
செயல்படுத்தியவர்‌ சேகர்பாபு தான்‌. கோவில்‌ நிலங்கள்‌ மீட்கப்படுகின்றன. கோவில்‌ சொத்துக்களும்‌ மீட்கப்படுகின்றன. அனைத்துச்‌ சாதியினரும்‌ அர்ச்சகர்‌ ஆகலாம்‌ என்று சட்டம்‌ நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

தமிழில்‌ வழிபாடு செய்யப்படக்கூடிய ஒரு அற்புதம்‌ இந்தத்‌ துறையின்‌ மூலமாக
நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

இறைவனைப்‌ போற்றும்‌ போற்றிப்‌ பாடல்‌ புத்தகங்கள்‌ வெளியாகி உள்ளது.

அர்ச்சகர்களுக்கு நான்காயிரம்‌ ரூபாய்‌ நிதி தரப்பட்டுள்ளது. பதினைந்து வகையான பொருட்கள்‌ தரப்பட்டுள்ளது. சட்டமன்றத்திலே இதுவரை இல்லாத வகையில்‌, அறநிலையத்துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் 120 அறிவிப்புகளை
சேகர்பாபு அறிவித்தார்‌. இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில்‌ திருப்பணிகள்‌ நடக்க இருக்கிறது. புதிய தேர்கள்‌ வலம்‌ வரப்‌ போகின்றன. அதுமட்டுமல்ல, இதுவரைக்கும்‌ இல்லாத வகையிலே, திருக்கோயில் ‌
கல்லூரிகள்‌ தொடங்கப்பட உள்ளன. அதுதான்‌ மிகமிக முக்கியமான ஒன்று.

அர்ச்சகர்கள்‌, கோயில்‌ பணியாளர்களுக்குக்‌ குடியிருப்புகள்‌ கட்டித்‌ தரப்பட
உள்ளன. இவை அனைத்தும்‌ செய்து முடிக்கப்பட்டால்‌ அறநிலையத்‌ துறையின்‌
பொற்காலம்‌ இன்னும்‌ சில மாதங்களில்‌ உருவாகப்‌ போகிறது.

அந்த வரிசையில்‌‌, ஒருகால பூஜை திட்டத்தின்கீழ்‌ உள்ள 12,959 கோவில்களைச்‌ சேர்ந்த அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌, பூசாரிகளுக்கு மாதம்தோறும்‌ ஆயிரம்‌ ரூபாய்‌ வழங்கும்‌ திட்டத்தை நான்‌ தொடங்கி வைத்துள்ளேன்‌. இதன்மூலமாக அரசுக்கு ஆண்டு தோறும்‌ 13 கோடி ரூபாய் ‌ கூடுதலாகச்‌ செலவாகும்‌. ஒருகால பூஜை நடக்கும்‌ கோயில்களுக்கான வைப்பு நிதி 2 லட்சம் ரூபாயாக அதிகரித்தும்‌ தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும்‌ கோயில்களில்‌ வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்குப்‌ பணியாற்றும்‌ அர்ச்சகர்கள்‌, பட்டாச்சாரியார்கள்‌, பூசாரிகளின்‌ வாழ்க்கைக்கும்‌ உத்தரவாதம்‌ தரப்பட்டுள்ளது. இதன்‌ அடிப்படையில்‌ நான்‌ இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறேன்‌.

இவ்வாறு முதல்வர் பேசினார்.

Spread the love