September 20, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த நிலக்கடலையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி

திண்டுக்கல், செப்.13

நிலக்கடலையில் ஊடுபயிராக கம்பு சாகுபடி செய்தால் பூச்சித் தாக்குதலை குறைக்கலாம் என, வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் சரவணன் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது : மானாவாரி சாகுபடியில் நிலக்கடலை பிரதான பயிராக உள்ளது. தற்போது டி.எம்.வீ.14, பவானிசாகர் 2, டி.ஆர்.ஐ.8 கோ 7 மற்றும் தரணி போன்ற ரகங்கள் அதிக மகசூலை தருகின்றன. கடலை பயிரிடும் போது ஏக்கருக்கு 50 கிலோ வீதம் விதையை பயன்படுத்தவும். விதை நேர்த்தி செய்ய டிரைக்கோடெர்மா வீரிடி ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் வீதம் சேர்த்து விதைக்க வேண்டும்.

விதைத்த 3ம் நாள் பென்டிமெத்தலின் களை கொல்லியை 1.3 லிட்டர் அளவில் தெளிக்கவும். விதைத்த பின்பு 25-30ம் நாட்களில் இமாசித்பயர் என்ற களைக்கொல்லியை 300 மி.லி., பயன்படுத்தலாம். அடியுரமாக ஏக்கருக்கு 10 கிலோ ஜிங்க் சல்பேட், 160 கிலோ ஜிப்சம் இட வேண்டும். இதனுடன் 5 கிலோ யூரியா, 10 கிலோ டி.ஏ.பி., 30 கிலோ பொட்டாஷ் உரங்களை பிரித்து இட வேண்டும்.

இலைவழி தெளிப்பாக நிலக்கடலை ரிச் என்ற வளர்ச்சி ஊக்கியை பூ பூக்கும் பருவம் மற்றும் காய் பிடிக்கும் பருவம் நிலையில் ஏக்கருக்கு 2 கிலோ வீதம் 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். ஆமணக்கு செடிகளை வயல் ஓரங்களில் 6 அடிக்கு ஒன்றாக நடவு செய்ய வேண்டும். நிலக்கடலையில் கம்பு பயிரை ஊடுபயிராக பயிரிட்டால் பூச்சித் தாக்கத்தை குறைக்கலாம், என அவர் கூறினார்

Spread the love