May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பூவிசார் குறியீடு பற்றிய தகவல்

தற்போது அந்த அந்த வட்டாரங்களில் விளைகின்ற அல்லது உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு, பாரம்பரிய தனித்துவம் வாய்ந்த பொருட்களுக்கு, எப்போதும் சந்தையில் நல்ல வரவேற்பும், கூடுதலாக விற்பனை வாய்ப்பும் உண்டு என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். இதற்கான தனி ஒரு அங்கீகராம் கிடைத்தால் அதன் மதிப்பு விற்பனை சந்தையில் முதலிடத்தில் இருக்கும் என்பது யாவரும் அறிந்த செய்தியாகும். இவ்வாறாக மத்திய அரசின் அங்கீகரிக்கப்பட்ட பூவிசார் குறியீடு 1999யில் கொண்டு வரப்பட்டு, 2002 விதிமுறைகள் வகுக்கப்பட்டு, 2003யில் நடைமுறைப்படுத்தப்பட்டது.

முதன்முதலாக 2004-05ஆம் ஆண்டில் “டார்ஜிலிங் தேயிலை ” க்கு பூவிசார் குறியீடு (Geographical indication) GI வழங்கப்பட்டது. இந்த குறியீடு பெற்ற பொருட்களை வேறு பகுதியில் உற்பத்தி செய்யபட்டாலும் அதற்கு கிடையாது. அவ்வாறு தவறாக உபயோகித்தால் சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும், அபராதமும் விதிக்க வழிமுறை உண்டு. தமிழகத்திலுள்ள கிட்டத்தட்ட 42 பொருட்களுக்கு பூவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றது. குறிப்பாக பண்ருட்டி பலாப்பழம், பழனி பஞ்சாமிர்தம், பத்த மடை பாய், மதுரை மல்லி, கோவில்பட்டி கடலை மிட்டாய் போன்ற பொருட்களுக்கு பூவிசார் குறியிடு கிடைக்க பெற்றது குறிப்பிடத்தக்கது.

தற்போது கூட புளியங்குடி எலுமிச்சம் பழம், விருதுநகர் சம்பா வத்தல் போன்ற பொருட்களுக்கு அதன் தனித்தன்மையை உரிய ஆவணங்களுடன் விளக்கி விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

சென்னையில் உள்ள கிண்டி அறிவு சார் சொத்துரிமை அலுவத்தில் இதற்கான தனி அலுவலகம் செயல்படுகிறது. எந்த ஒரு தனிநபரும் இதற்கு விண்ணப்பிக்க முடியாது. தொழில் செய்யும் உற்பத்தியாளர்கள் அமைப்பு, வேளாண் விளைபொருட்கள் வாரியம். உழவர் உற்பத்தியாளர் கம்பெனி, நபார்டு போன்ற அமைப்புகளால் உரிய தரவுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, இதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பக்கபட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் பரிந்துரைக்கு பின் அரசு கெஜசட்டில் வெளியிடப்படும். ஆட்சேபனை இருந்தால் ரத்து செய்யப்படும். இல்லாதபட்சத்தில் மத்திய அரசால் பூவி சார் குறியீடு வழங்கப்படும். TRIPS ஒப்பந்த படி இது ஒரு அறிவுசார் சொத்தாக கருதப்படுகின்றன. இன்னும் பாரம்பரிய பொருட்களை தேடி பிடித்து ,அதனை ஆழிவிலிந்து காபாற்றி பூவிசார் குறியீடு பெற்று அதன் தனித்துவ தன்மையை உலகிற்கு உணர்த்திடுவோம்.

தகவல் : அக்ரி சு.சந்திர சேகரன், வேளாண் ஆலோசகர், அருப்புக்கோட்டை.

Spread the love