June 21, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்: சுகாதாரத்துறை

புது தில்லி, ஏப்.27

கோவிட் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்வதுடன் தங்கள் வீடுகளிலேயே முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

புது தில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை இணைச் செயலாளர் லாவ் அகர்வால் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் வேகம் அதிகரிக்கப்படவேண்டும் என தெரிவித்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது:

பெண்கள் மாதவிடாய் காலத்திலும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம் என்றார். பல இடங்களில் மக்கள் அச்சத்தால் மருத்துவமனை படுக்கைகளை ஆக்கிரமித்து இருக்கின்றனர். மருத்துவர்களின் ஆலோசனையின்படியே மருத்துவமனைகளில் நோயாளிகள் சேர்க்கப்படவேண்டும் என்றார். மேலும், போதிய மருத்துவ ஆக்சிஜன் நம்மிடம் இருக்கிறது என்றும், அதை தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்ப்பதிலேயே சவால் பணி சவாலாக உள்ளது என்று தெரிவித்தார். மேலும், சமூக இடைவெளி பின்பற்றப்படாவிட்டால் கோவிட் தொற்று பாதிக்கப்பட்ட ஒரு நபர் மூலம் 30 நாட்களில் 406 பேருக்கு தொற்று பரவுவுகிறது. சமூக இடைவெளி 50 சதவிகிதம் பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து 15 பேருக்கு மட்டுமே தொற்று பரவும்.

75 சதம் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டால் ஒரு நபரிடமிருந்து 2.5 பேருக்கு மட்டுமே தொற்று பரவும் என்று அவர் கூறினார்.

Spread the love