May 18, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரம்பலூர் மாவட்ட மண் பரிசோதனை நிலையத்தில் திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு பயிற்சி

பெரம்பலூர், மார்ச் 15

பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படும் மண் பரிசோதனை நிலையம் செயல்பாடுகளை திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மாணவர்களுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் (தரக்கட்டுப்பாடு) ராதாகிருஷ்ணன் எடுத்துரைத்தார். பெரம்பலூர் மண் பரிசோதனை நிலையம் 2009 முதல் செயல்பட்டு வருகிறது. இதில் விவசாயிகள் தங்கள் மண் மற்றும் தண்ணீர் மாதிரிகளை இருபது ரூபாய் செலவில் பரிசோதனை செய்து அதனடிப்படையில் மேலாண்மை முறைகளை கையாளலாம். மண் பரிசோதனை முடிவுகளில் மண்ணிலுள்ள கரிம நிலை ஊட்டச்சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து ஆகியவற்றின் அளவு மற்றும் நுண்ணூட்டச்சத்துக்களின் அளவு குறிப்பிடப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனடிப்படையில் விவசாயிகள் இடவேண்டிய உயிர் உரங்களின் அளவு, நுண்ணூட்ட உரங்களின் அளவு மற்றும் பேரூட்ட சத்துக்களின் அளவு ஆகியவை விவசாயிகளுக்கு பயிர்க்கு ஏற்றார் போல் பரிந்துரையாக வழங்கப்படுகிறது. விவசாயிகள் இச்சேவையை பயன்படுத்துவதற்கு வேளாண் கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் இப்பயிற்சி வழங்கப்பட்டது. இதில் மண் பரிசோதனை நிலையம், வேளாண்மை அலுவலர் ரமேஷ் மற்றும் மண் பரிசோதனை நிலையம் உதவி வேளாண்மை அலுவலர் சத்திய சீலன் மற்றும் குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

Spread the love