August 5, 2021

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணைக்கு நீர்வரத்து சரிவு

தேனி, மே 10

பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான தேக்கடி, பெரியாறில் கோடை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பெரியாறு அணை நீர்மட்டம் 128 அடி வரை உயர்ந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. இதனால் அணைக்கு 1150 கனஅடியாக இருந்த நீர்வரத்து 400 கனஅடியாக குறைந்தது. தமிழக குடிநீர், சாகுபடிக்காக வினாடிக்கு 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 128.10 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பகலில் நீர்ப்பிடிப்பில் கடும் வெப்பம் நிலவியது.

Spread the love