August 15, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

தேனி, ஜூலை 11

கேரளாவில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இதனால் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இடுக்கி மாவட்டத்தில் பெய்து வரும் கன மழையினால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அணையின் நீர் மட்டம் நேற்று காலை நிலவரப்படி 128.40 அடியாக இருந்தது.

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்படுவதாலும், வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதாலும் அணைக்கு நீர் வரத்து அதிகரித்து வருகிறது. 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர் மட்டம் நேற்று முன்தினம் 54.59 அடியாக இருந்தது. நேற்று காலை 55.32 அடியாக உயர்ந்தது. நீர் வரத்து 1612 கன அடி. மதுரை குடிநீர் மற்றும் கம்பம் பள்ளத்தாக்கு பாசனத்துக்கு என மொத்தம் 969 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 2770 மி.கன அடியாக உள்ளது.

மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 49.20 அடியாகவும், சோத்துப்பாறை அணை நீர் மட்டம் 76.26 அடியாகவும் உள்ளது.

Spread the love