June 25, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணையில் நீர் திறப்பு அதிகரிப்பு

தேனி, ஏப்.28

பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு திறக்கும் நீர் அளவு 150 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கரில் இருபோக நெல் சாகுபடி உள்ளது. இரண்டாம் போக சாகுபடி முடிவுக்கு வந்ததால் அணையில் இருந்து தமிழகத்துக்கு திறந்த 300 கனஅடி

நீர் கடந்த 11ம் தேதியில் 100 கனஅடியாக குறைக்கப்பட்டது. இந்நிலையில் கூடலூரில் சாகுபடிக்கு இன்னும் ஒரு வாரம் தண்ணீர் தேவை உள்ளதாக விவசாயிகள் வலியுறுத்தினர்.

இதனால் தமிழகத்துக்கு திறந்த 100 கனஅடி நீர் செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து 150 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. பெரியாறு அணையில் 6.20 மி.மீ., மழை பதிவானது. அணை நீர்மட்டம்

126.65 அடியாக (மொத்த உயரம் 152 அடி) உள்ளது.

Spread the love