January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணை நீர் திறப்பை குறைக்க வலியுறுத்தல்

தேனி, மே 19

நீர் இருப்பை அதிகரிக்க பெரியாறு அணையில் திறக்கப்பட்டுள்ள நீரின் அளவை 300 கன அடியாக குறைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி மாவட்டம், கம்பம் பள்ளத்தாக்கில் 14,707 ஏக்கர் பரப்பளவில், பெரியார் அணை நீரை பயன்படுத்தி, இரு போக நெல் சாகுபடி நடப்பது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் முதல் போக நெல் சாகுபடிக்காக ஜூன் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்கப்படும். கடந்த 2 ஆண்டுகளாக அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் 2 மாதம் தாமதமாக ஆகஸ்டில் திறக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் நீர்மட்டம் 113.20 அடியாக இருந்தது. தற்போது 17 அடி வரை உயர்ந்து 130.20 அடியாக உள்ளது. அதனால் இந்த ஆண்டு ஜூன் முதல் வாரத்திலேயே விவசாயத்திற்கு தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளதால் அணையில் தண்ணீரை தேக்கும் வகையில் தற்போது தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள 900 கன அடி நீரை 300 கன அடியாக குறைக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love