August 12, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணை நீர் மட்டம் உயர்வு நீர்திறப்பு அதிகரிப்பு

தேனி, மே 17

நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழை காரணமாக பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டியதால் தமிழகத்துக்கு திறக்கும் நீரின் அளவு 900 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

டவ்டே புயல் காரணமாக பெரியாறு அணை நீர்ப்பிடிப்பில் கடந்த 2 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி பெரியாறில் 53.8 மி.மீ., தேக்கடியில் 55 மி.மீ., மழை பதிவானது. இதனால் அணைக்கு வினாடிக்கு 1388 கனஅடியாக இருந்த நீர்வரத்து 2478 கனஅடியாக அதிகரித்தது. மதியம் 12 மணிக்கு அணை நீர்மட்டம் 130 அடியை (மொத்த உயரம் 152 அடி) எட்டியது.

நீர்மட்டம் தொடர்ந்து உயர்வதால் தமிழகத்துக்கு திறக்கும் நீரின் அளவு 500 கனஅடியில் இருந்து 900 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேனி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகளவில் கூடலூரில் 15.3 மி.மீ., மழை பெய்துள்ளது. உத்தமபாளையத்தில் 9.4 மி.மீ., வீரபாண்டியில் 13, வைகை அணை நீர்பிடிப்பில் 9.4, சோத்துப்பாறை அணை நீர்பிடிப்பில் 15, மஞ்சளாறு அணை நீர்பிடிப்பில் 3, சண்முகாநதி அணை நீர்பிடிப்பில் 7.6 மி.மீ., மழை பெய்துள்ளது.

இதனால் அணைகளில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. இதன்படி, வைகை அணை நீர்மட்டம் 62.93 அடியாக உள்ளது. அணைக்கு தண்ணீர் வரத்து விநாடிக்கு 930 கன அடி. அணையிலிருந்து விநாடிக்கு 60 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. சோத்துப்பாறை அணைக்கு விநாடிக்கு 253 கன அடியும், மஞ்சளாறு அணைக்கு விநாடிக்கு 79 கன அடியும் தண்ணீர் வரத்து உள்ளது.

Spread the love