January 23, 2022

ValarTamil Publications

AgriDoctor & Kaalaimani

பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை

தேனி, மே 11

பெரியாறு அணை பகுதியில் சாரல் மழை பெய்தது.

கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள பெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியான தேக்கடியில் 5.6, பெரியாறில் 2 மி.மீ., மழை திங்களன்று காலை வரையில் பதிவானது. இதனால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 400 கனஅடியாக இருந்தது. தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக 150 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 128.20 அடியாக (மொத்த உயரம் 152 அடி) இருந்தது. திங்கள்கிாமை பகலில் நீர்பிடிப்பு பகுதியில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட போதிலும் மழை பெய்யவில்லை. கோடைமழை தொடரும் பட்சத்தில் ஜூனில் தேனி மாவட்ட முதல் போக நெல் சாகுபடிக்காக தண்ணீர் திறப்பில் தாமதம் ஏற்படாது என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Spread the love